WELCOME
www.omnamashivaayaa.blogspot.com
ருத்ராட்ஷம் இறைவன் சிவனின் அம்சம். ருத்ராட்ஷம் அணிந்தால் சகல நலன்களும் கிடைக்கும். ருத்ராட்ஷம் இலவசமாக பெற உங்களது முகவரியினை sms அனுப்பவும். ருத்ராட்ஷம் அணிய விரும்புபவர்கள் மட்டுமே முகவரியினை கீழே உள்ள போன் நெம்பர்க்கு sms அனுப்பவும், ருத்ராட்ஷம் பெற்று அதை அணியாமல் வைத்திருந்தால் பாவச்செயலாகும்.
முருகனடிமை ராஜேந்திரன் muruganadimai108@gmail.com



சனி, 26 மே, 2012

ருத்ராட்ஷம் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டியவை?

                                                


                                                   முருகா சரணம்
   மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஐந்து முகம் ஒரு ருத்ராட்ச்சம் எப்போழுதுமே அணிந்து கொண்டே இருக்க வேண்டும் நம்மை படைத்ததே பாவங்களைப் போக்கி மீண்டும்
சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே.
SMS செய்பவர்களுக்கு:-
இலவசமாக ஐந்து முகம் ருத்ராட்ஷம் 3,மூன்றூ நபர்க்கு கழுத்தில் அணிவதர்க்கு மட்டும் கூரியர் மூலம் அனுப்பி வைப்போம் மூன்று நபர்க்கு மேல் அதிகமாக வேண்டுபவர்கள் எத்தனை வேண்டுமோஅதை SMS - ல் எழுதி அனுப்பவும்
கிடைத்தவுடன் உடனே அணிந்து விடவும்.அணியாமல் வீட்டில்
வைத்திருக்க கூடாது. அணிந்த பின் ஒரு
வினாடி நேரம் கூட உயிர் பிரியும் வரை கழுட்டவே கூடாது.
ருத்ராட்சம் ஒரு வினாடி நேரம் கூட கழுட்டாமல் அணிந்து கொண்டே இருப்பவர்களின் வீட்டில் தொழிலில் வெற்றியும் மேன்மையும் சகல ஐஸ்வர்யங்களும் அஷ்டலட்சுமிகளும் குடியிருக்கும் இது என் அனுபவத்தில் அனுபவித்த உண்மை. இறைவன் இவ் உலக மக்களை எவ்வாறு எனும் நல்வழி நற்கதி எற்படுத்த எங்களை போன்றவர்களுக்கு இப்பனியை ருத்ராட்சம் இலவசமாக தருவதற்கு ஏற்பாடு செய்துள்ளார் அப்படி இருந்தும் அணிவதற்கு யாரும் முன்வருவது 
இல்லை ! இறைவன் யவர் மீது கருனை அன்பு செய்கின்றறோ அவர்களுக்கு தான் ருத்ராட்சம் அணியும் பாக்கியம் கிடைக்கும்.
ருத்ராட்சம் அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவர் ஆவார்.
ஒருவர் ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம் செய்து இருந்தால் தான் அவர்களுக்கு ருத்ராட்சமே கிடைக்கும். ருத்ராட்சம் அணிவதற்கு பயப்பட வேண்டாம் யார் வேண்டும் என்றாலும் ஜாதி மதம் பேதம் இல்லாமல் அணிந்து கொள்ளலாம்.
இறைவனின் கருனையால் இவ்வுலக மக்கள் எல்லோரும் சிவபெருமானின் அருள் கிடைக்கவேண்டும் என்று என்னி என் உயிரின் மேலாகக் கருதி இச்சேவையை இலவசமாக செய்கிறேன் அதனால் தயவு செய்து ருத்ராட்சம் எப்பொழுதுமே கழுத்தில் அணிந்து கொண்டே இருப்பவர்கள் மட்டுமே? வாங்கவும் உங்கள் முகவரியை SMS செய்யவும்.
Name Door No Street Name Post Box Name Taluk Name District Name Pin Code Number Mobile Number Please Full address Message SMS 9442441111
  குறைந்தபட்சம் தமிழ்நாடக இருந்தால் 3 நபர்களுக்கும் . வெளி மாநிலங்களுக்கு 5 நபர்களுக்கும் . வெளி நாடுகளுக்கு 10 நபர்களுக்கும். அனுப்புவோம் இதற்கு குறைவாக அனுப்புவது இல்லை. உயிர் பிரியும் வரை ஒரு வினாடி நேரம் கூட ருத்ராட்சத்தை கழுட்டவே கூடாது அப்படி எப்போதும் அணிந்து கொண்டே இருப்பவர்கள் மட்டுமே ருத்ராட்சம் வாங்கவும் இல்லை என்றால் வாங்க வேண்டாம் ருத்ராட்சம் மற்றவர்களுக்கு ஆவது உதவும்.

முக்கிய குறிப்பு:-
தயவு செய்து ருத்ராட்சம் கழுத்தில் அணிவதற்க்கு மட்டுமே  வாங்கவும் கையில் வைத்து தியானம் செய்ய வாங்க வே.... வேண்டாம் ஒரு ருத்ராட்சம்  கழுத்தில் அணிந்து நாம ஜெபம் செய்தாளே கோடான கோடி சக்தி கிடைக்கும்.
உங்கள் பாதத்தை தொட்டு வனங்குகிறேன் தயவு செய்து ருத்ராட்சத்தை எப்பொழுதும் அணிந்தே இருக்கவும் அப்படி அணிந்து கொன்டே இருக்க முடியாதவர்கள். 
எங்கள் முகவரிக்கு திருப்பி அனுப்பி விடவும் 
மற்றவர் களுக்காவது பயன்தரும் உத்தமம்.
  
  ருத்ராட்ச்சம்:- வெற்றி லட்சுமிகடாட்சம் நல்லொழுக்கம் நற்கதி முக்திக்கு  வலிநடத்தும்.   



   முக்கியமாக  பிரதோஷ தினத்தன்று சிவன்
கோவிலுக்குச் சென்று   உங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் மாலை 4.30 - 7.00 pm மணிக்குள் நடைபெறும்
''பிரதோஷ பூஜையில் கலந்து  சகல ஐஸ்வர்யங்களும் பெறுங்கள்.


=====================================================================

                      ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம்



  எவ்வித மந்திரங்களை உச்சரிக்காதவனும்,எவ்வித யாகங்களைச் செய்யாதவனும் கூட ருத்ராட்ச மணிகளை வெறுமனே தொடுவதன்மூலம் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு மறுபிறவியில் ருத்ரனாகவே அவதரிக்கிறான்.

 ருத்ராட்சத்தை அணிபவனும்,வழிபடுபவனும் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு,தொடரவிருக்கும் அனேக கோடி பிறப்புகளிலிருந்தும் விடுபடுகிறான்.

 ருத்ராட்சம் அணிந்த ஒருவனுக்கு உணவும்,உடையும் தருபவனும்,ருத்ராட்சம் அணிந்த சிவனடியார்களின் பாதங்களைக் கழுவிய நீரை தீர்த்தமாக ஏற்றுக்கொள்பவனும் அனைத்துப்பாவங்களிலிருந்தும் விடுபட்டு,சிவலோகத்தை அடைகிறான்.

 நம்பிக்கையோடும்,நம்பிக்கையில்லாமலும் ருத்ராட்சத்தை அணிந்துகொள்பவன் ருத்ர அம்சத்தைப் பெறுகிறான்.
ருத்ராட்சத்தின் மகிமையை என்னாலும் விளக்கிக் கூற முடியாது என்று சிவபெருமான் தேவிக்கு உரைத்ததாக ஸ்ரீமத் தேவிபாகவதம் கூறுகிறது.
அனைத்துவித ஸ்தோத்திரங்களை உச்சரிப்பதன்  மூலமும்,விரதங்களை அனுசரிப்பதன் மூலமும் அடைகின்ற பலனை,ஒருவன் ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதன் மூலம் பெறுவான்.

 ருத்ராட்ச மாலையை அணிந்தவருக்கு ஒருவன் உணவு அளிப்பானாகில்,அவனது 21 தலைமுறை மக்களும் பாவங்களிலிருந்து விடுபட்டு ருத்ரலோகத்தை அடைவார்கள்.
சண்டாளனாகப் பிறந்தவனும்,ருத்ராட்சத்தோடு தொடர்பு கொள்வானாயின் அவனது பாவங்கள் அவனை விட்டு விலகி ஓடிவிடும்.
கள் உண்பவனும்,மாமிசம் உண்பவனுமாகிய பாவியின் தலையில் ருத்ராட்சம் படுமேயானால் அவனது பாவங்கள் அனைத்தும் விலகும்.

 ருத்ராட்சமாலையை ஒருவன் வெறுமனே கையில் பிடித்திருந்தாலும், நான்கு வேதங்களையும்,சாஸ்திரங்களையும்,உபநிடதங்களையும் கற்றறிந்தவனைவிட சிறப்பு பெறுவான்.அனைத்துக் கல்வி வேள்விகளும் அவன் வசமாகின்றன.பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனைவிட அதிக பலனைப் பெறுகிறான்.
ஒருவன் மரணம் அடையும் தருவாயில் ருத்ராட்சத்தை தரித்துக் கொண்டிருப்பானாகில்,அவன் இறந்தபின் ருத்ர லோகத்தை அடைகிறான்.

 பிறப்பால் ஒருவன் பிராமணனோ அல்லது சண்டாளனோ அல்லது மிலேச்சனோ; உண்ணக்கூடாததை உண்பவனோ யாராகிலும் அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில் அவன் ருத்ரனுக்கு இணையாகிறான்.

 ருத்ராட்சத்தைத் தலையில் தரிப்பவன் கோடி புண்ணியங்களைப் பெறுவான்.காதுகளில் அணிபவன் பத்துகோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;கழுத்தில் அணிபவன் நூறுகோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;பூணூலில் அணிபவன் ஆயிரம் கோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;கைகளில் அணிபவன் லட்சம் கோடிப் புண்ணியத்தைப் பெறுகிறான்; இடுப்பில் அணிபவன் மோட்சத்தை அடைகிறான்.

 ருத்ராட்சத்தை அணிந்தவாறு , வேத நியமங்களை ஒருவன் கடைபிடிப்பானாகில் அவன் பெறும் பலன்களை அளவிட முடியாது;
கழுத்தில் ருத்ராட்ச மாலையை அணிந்தவன் இந்த உலகத்தளைகளிலிருந்து விடுபடுகிறான்.
ருத்ராட்சம் அணிந்தவன் சிவபெருமானைப் போலவே முப்பத்துமுக்கோடி தேவர்களாலும் வணங்கப்படுகிறான்.
ருத்ராட்சத்தைத் தலையில் தரித்து ஒருவன் நீராடுவான் எனில்,ருத்ராட்சத்தைத் தொட்ட நீர் அவன் உடலைத் தீண்டுமாயின்,அது கங்கையில் நீராடியதைவிட அதிகப்புண்ணியப்பலன்களைத் தரும்.

 மனிதன் மட்டுமல்ல;ஓரறிவுள்ள பிராணிகள் முதல் ஐந்தறிவுள்ள உயிர்கள் வரை ருத்ராட்சத்தோடு சம்பந்தம் பெற்றால்,அவை அனைத்தும் மறுபிறவியில் சிவலோகத்தை அடைந்தே தீரும்.பல்வேறு யுகங்களில் நாயும்,கழுதையும்,கோழியும், ருத்ராட்சத்தோடு தொடர்பு பெற்றதால் அவை சிவலோகம் சென்றடைந்தன.மறு ஜன்மத்தில் சிறந்த சிவ பக்தர்களாகப் பிறந்தன.

 ==========================================================  

                        ருத்ராட்சம் அணிவதுபற்றி சிவபுராணம்

  பஞ்சாட்சர மந்திரங்களை உச்சரித்தல்,திருநீறு தரித்தல்,ருத்ராடம் அணிதல் இம்மூன்றையும் ஒருவன் ஒருசேர செய்வது: திரிவேணி சங்கமத்தில் நீராடுவதன் புண்ணியத்தைப் பெற்றுத்தரும்.
ருத்ராட்சங்களை எண்ணற்ற அளவில் உடலில் தரித்துக் கொள்பவன்,மகேசனைப் போல அனைத்துத் தேவர்களாலும் தலை தாழ்ந்து வணங்கப்படுகிறான்.

  ஒருவன் எவ்வகைப் பிறவி எடுத்திருந்தாலும் சரி, அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில்,நரகங்களிலிருந்து விடுபடுகிறான்.
எவ்வகை வர்ணத்தை(ஜாதியை)ச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி;எவ்வகை ஆசாரத்தைக் கடைபிடிப்பவராயினும் சரி; பெண்களாயினும் சரி; அவர்கள் ‘ஓம் நமசிவாய’ என்னும் மந்திரத்தை உச்சரித்து,ருத்ராட்சங்களை அணிந்து கொள்ளலாம்.

 ருத்ராட்சத்தை ஒருவன்/ள் ஒரு பகலில் அணிந்திருப்பானாயின், அவன் இரவில் செய்த பாவங்களை அது எரித்துவிடும்.இரவில் அணிந்திருப்பானாகில் அது அவன் பகலில் செய்த பாவங்களை எரித்துவிடுகிறது.ஆதலால் ஒருவன் எந்நேரமும் ருத்ராட்சங்களை அணிந்து கொண்டிருக்க வேண்டும்.

  ருத்ராட்சமும் திருநீறும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை;

  ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும்,அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும்.
ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான்.அவனை அகால மரணமோ,துர்மரணமோ நெருங்குவதில்லை.
==============================================                       


        அவன் அருளாலே அவன் தால் வணங்கி

    திருநீறு தரித்தல் ருத்ராட்ஷம் அனிதல் பஞ்சாட்சர மந்திரமான (ஓம்நமசிவாய) உச்சரித்தல் இம்மூன்றும் ஒரு சேரச்செய்து வந்தால்    
குபேரனுக்கு இணையாக வாழலாம்.
                                                                                                                                                                    
                                              பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
                                                   பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
                                              உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் 
                                                   உயிரை மேவிய உடல் மறந்தாலும்
                                              கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
                                                   கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
                                              நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
                                         நமசிவாயத்தை நான் மறவேனே.    

           பிறருக்கென நீ இருந்தால்
                             உனக்கென இறைவன் இருப்பார்!
                                         
ருத்ராட்சம் சிவப்பு கயுறுடன் கூடியது இலவசமாகப் பெறுவதற்கு உங்கள் முகவரியை SMS செய்யவும்
                        
                                             முருகாசரணம் திருச்சிற்றம்பலம் 
                                     முருகனடிமை ராஜேந்திரன்            
                                                                          SALEM MAIN ROAD 
                                           SANKARI SALEM DT 637301 
                                           TAMILNADU INDIA                                     
                                           muruganadimai108@gmail.com


                             

  *************************************************
     இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத
நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும்,
விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ
திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள்
தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன்
கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம்
என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான்
உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும்,
பெருமையும் உள்ளவை.
கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத்
துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ
வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில்
இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும்,
எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்!
எதிலும் சிவமயம்!
ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும்
ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன்
கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும்.
சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில்
கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக்
கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில்
விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன்
அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ
நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால்
நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம்
தூய்மை அடையும். 

                                     :நன்றி ''தினமலர்'' 
======================================================================
        தினந்தோறும் ஓம்நமசிவாய என்று "108" முறை
எழுதுவோருக்கு  சகல ஐஸ்வர்யமும்  வெற்றியும்  கிடைக்கும்  கண்டீப்பாக  ஒவ்வொருவரும் எழுதி பயன் பெறுங்கள்.  
108 முறை ஓம் நமசிவாய எழுத வெறும் 7 நிமிடங்கள் போதும்
அடியேன் (நான்) 1993 முதல் தினம்தோறும் இறைவனின் கருனையால் 108 முறை ஓம் நமசிவாய எழுதி வருகிறேன்.



       திருவைந்தெழுத்து - ஓம் நமசிவாய
    பரம கருணா மூர்த்தி, தியாகராஜன், மங்களங்களை அருளும்
சிவபெருமானது மூல மந்திரம் " ஓம் நமசிவாய " மந்திரம். வேதங்களில்
முதன்மையானது யஜுர் வேதம் அந்த வேதத்தின்
நடு நாயகமானது சிவபெருமானுக்கு மிகவும் பிரீதியானதும் அவர் புகழ்
பாடுவதும், சிவ பெருமானுக்கு அபிஷேக காலங்களில் ஓதப்படுவதுமான
ஸ்ரீ ருத்ரம், அதன் நடு நாயகம் "ஒம் நமசிவாய " மந்திரம். தாயை சேய்
அழைப்பது போல ஓம் நமச்சிவாய மந்திரத்தால் அந்த முக்கண் முதல்வனை,
கொடிமேல் இடபமும், கோவண ஆடையும், ஒரு கொக்கிறகும், அடி மேல்
வீரக்கழலும், உடல் முழுவதும் பால் வெண்ணிணிறும், நாகாபரணமும்,
முடி மேல் மதியும், மங்கையும், கொன்றையும், திருக்கரங்களில்
திரிசூலமும் தாங்கிய தேவ தேவனை, முழு முதற் கடவுளை, அகிலாண்ட
கோடி பிரம்மாண்ட நாயகனை அழைக்க உடனே அவர் ஓடி வந்து நம் துன்பம்
தீர்க்கும் மந்திரம்.
கற்றுணை பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாகும் மந்திரம்.
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆன மந்திரம். நம்முடைய காரிய
சித்திக்காக இறைவன் அருளிய மந்திரம். பல கோடி வருடங்களில் கூட இந்த
மந்திரத்தின் மகிமையை உரைக்க முடியாது. வேத சாரமாக
விளங்குவது இந்த ஐந்தெழுத்து மஹா மந்திரம். மோட்சம் அளிக்கும் மந்திரம்.
சிவனுக்கும் சக்திக்கும் உரிய மந்திரம். மந்திரகளுக்கெல்லாம் தாயகமாக
விளங்குகின்றது பஞ்க்ஷாரம். காயத்ரி தேவி தோன்றிய மந்திரம்.
இம்மை பலன்கள் மட்டும் அல்ல முக்தியும் அளிக்கும் மந்திரம். இந்த மந்திரத்தின்
அதிர்வலைகள் அண்டம் முழுவதும் பரவி உள்ளதால் ஒரு தடவை ஜபித்தால்
கூட அருமையான பலன் அளிக்கும் மந்திரம்.
சிவபுராணத்தில் இந்த மஹா மந்திரத்தின் தொடக்கம்
பற்றி இவ்வாறு கூறப்பட்டுள்ளது. எம்பெருமானது வடக்கு திருமுகமாம்
வாமதேவ முகத்தில் இருந்து 'அகாரம்' தோன்றியது. மேற்கு நோக்கிய
சத்யோஜாத திருமுகத்திலிருந்து 'உகாரம்' தோன்றியது, தெற்கு நோக்கிய
திருமுகமாம் அகோர முகத்திலிருந்து 'மகாரம்' தோன்றியது.
கிழக்கு முகமாம் தத்புருஷ முகத்திலிருந்து பிந்துவும், மேல் நோக்கிய
திருமுகமாம் ஈசான முகத்தில் இருந்து நாதம் தோன்றியது. ஐந்தும்
இணைந்து ஓம் என்னும் பிரணவமாயிற்று. இந்த பிரணவத்துடன்
சிவனை வணங்குகின்றேன் என்று பொருள்படும் சிவாய நம: சேர்ந்து இந்த
சிவபெருமானுக்கும் சக்திக்கும் உரிய இந்த அற்புத மந்திரம் உருவானது.
ஜபிக்கும் முறை : உடல் முழுதும் திருநீறணிந்து, ருத்ராக்ஷம்
அணிந்து பத்மாசனத்தில் அமர்ந்து எம்பெருமானை தாமரையில் அமர்ந்த
கோலத்தில் . ஜடாமுடியில் கங்கை, சந்திரனுடன், வாம பாகத்தில்
ஆதி சக்தி பகவதி உமையம்மையுடன், பூத கணங்கள் புடை சூழ, மான், மழு,
திரிசூலம், அபய வரத கரங்களுடன் தியானம் செய்து இந்த
மஹா மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
108 ன் எண்ணிக்கைகளில் ஜபிப்பது உத்தமம். விரல்களால்
என்ணி ஜபிப்பது ஒரு மடங்கு பலம் தரும் என்றால், சங்கு மாலைகளால்
ஜபிப்பது பத்து மடங்கு பலனையும், பவள மாலையால்
ஜபிப்பது நூறு மடங்கு பலனையும், ஸ்படிக மாலையால் ஜபிப்பது ஆயிரம்
மடங்கு பலனையும், முத்து மாலையால் ஜபிப்பது லக்ஷ
மடங்கு பலனையும், ருத்ராக்ஷ மாலையால் ஜபிப்பது அனந்த
மடங்கு பலனையும் அளிக்கும். கட்டை விரலால் உருட்டி ஜபிப்பதால்
மோட்சம் கிட்டும், ஆள் காட்டி விரலால் ஜபிப்பதால் சத்ரு விநாசனம்,
நடுவிரலால் தனம் கிடைக்கும், மோதிர விரலால் ஜபிப்பதால்
சாந்தி கிட்டும் சுண்டு விரலை பயன் படுத்தக்கூடாது.
இம்மையில் எல்லா செல்வங்களையும் வழங்குவதுடன் மோக்ஷத்தையும்
அளிக்கும் இந்த மந்திரத்தை ஜபிக்க நாள், நட்சத்திரம், லக்னம், திதி, வாரம், யோகம்
எதுவும் பார்க்க வேண்டியதில்லை. நடந்து கொண்டோ , ஏதாவது செயல்
செய்து கொண்டோ, நின்று கொண்டோ கூட ஜபிக்கலாம்.
ஐந்து கோடி முறை ஜபிப்பதால் சிவாலயம் நிர்மாணம் செய்த பலன் கிட்டும்.
ஒன்பது கோடி முறை இம்மந்திரத்தை ஜபிப்பதால் மனது தூய்மை அடையும்,
18 கோடி முறை ஜபிப்பதால் நீரில் நடக்கலாம், 27 கோடி முறை ஜபிப்பதால்
அக்னி தத்துவத்தையும், 36 கோடி முறை ஜபிப்பதால்
வாயு தத்துவத்தையும், 45 கோடி முறை ஜபிப்பதால் ஆகாய
தத்துவத்தையும், 54 கோடி முறை ஜபிப்பதால்
ஐந்து குணங்களை வெல்லலாம், அகங்காரம் மாறும், 63
கோடி முறை ஜபிப்பதால் காரியத்தில் வெற்றி, 72
கோடி முறை ஜபிப்பதால் கோபத்தை வெற்றி கொள்ளலாம், 81
கோடி முறை ஜபிப்பதால் மோகத்தை வெல்லலாம், 90
கோடி முறை ஜபிப்பதால் லோபத்தை வெல்லலாம், 99
கோடி முறை ஜபிப்பதால் மதத்தை வெல்லலாம் 108 கோடி முறை ஜபிப்பவர்
மோட்சம் அடைவர்.
இல்லத்தில் செய்யும் ஓம் நமசிவாய மந்திர ஜபம் ஒரு மடங்கு பலனையும்,
கோசாலையில் செய்யும் ஜபம் நூறு மடங்கு பலனையும், வனம், நந்தவனம்
ஆகியவற்றில் செய்யும் ஜபம் ஆயிரம் மடங்கு பலனையும், பவித்ர மலைகளில்
செய்யும் ஜபம் பத்தாயிரம் மடங்கு பலனையும், நதிக்கரைகளில் செய்யும் ஜபம்
லக்ஷ மடங்கு பலனையும், சிவாலயத்தில் செய்யும் ஜபம் பத்து லக்ஷ
மடங்கு பலனையும் எம்பருமானுக்கு அருகில் செய்யப்படும் ஜபம் அனந்த
கோடி பலனையும் தரும். ஓம் நமசிவாய மந்திரம் எழுதுவது ஜபிப்பதைப்
போல நூறு மடங்கு பலன் தரும். இவ்வாறு இம்மந்திர ஜபம் செய்வதால்
மோக்ஷம் கிட்டும்.
திருநல்லூர் திருத்தலத்தில் நம்பியாண்டார் நம்பிகளின் திருமகளைத்
திருமணம் செய்து கொண்டபின், மனைவியின் கையைப் பிடித்துக்
கொண்டு அங்குள்ள அனைவரையும் அழைத்துக்கொண்டு 'நல்லூர்
பெருமணம்' என்ற பதிகத்தைப் பாடிக் கொண்டே கோயிலுக்குள்
நுழைந்தவுடன், ஈசன் அருளால் கர்ப்பகிரகத்தில் ஒரு ஜோதி தோன்றியது .
அப்பொழுது இந்த 'காதலாகிக் கசிந்து' என்ற நமச்சிவாயப் பதிகத்தைப்
பாடிக்கொண்டே எல்லோரையும் அந்த ஜோதியில் இரண்டறக் கலக்கச் செய்தார்
அப்போது ஆளுடையப்பிள்ளையாம் அம்மையின் ஞானப்பாலுண்ட திருஞான
சம்பந்தர் பாடிய நமசிவாயப்பதிகம் .
காதல் ஆகிக் கசிந்து கண்ணிர் மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே. (1)
நம்புவார் அவர் நாவில் நவிற்றினால்
வம்பு நாண் மலர்வார் மது ஒப்பது
செம்பொனார் திலகம் உலகுக்கு எலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே.
தினம்தோறும் 108 முறை ஓம் நமசிவாய எழுதி தும்பம் துயரம் துக்கம் வேதனை வலி கஷ்டம் பிரச்சனை தீர்த்துக்கொள்ளவும்.
சகலஐஸ்வர்யங்களும் அஷ்டலட்சுமிகளும் வீட்டில் குடியிருக்கவும் தொழில் மேன்மை (வெற்றி) பெறவும் ஒவ்வொருவரும் தினம்தோறும் ஓம் நமசிவாய 108 முறை எழுதி பயன்பெறுங்கள்.    


                                     நன்றி: சிவதிரு கயிலை மாமுனிவர் 
                                                     சிவகாளிமுத்து அடிகளார்  

                                                     செட்டிபாளையம்   கோவை 
                                  
  ######################################################################




                 பிறர் பயன்பெறவேண்டி  நகல் எடுத்து கொடுக்கவும்.
பிறருக்கென நீ இருந்தால்  
                             உனக்கென இறைவன் இருப்பார்!
==============================================
SP.RAJENDRAN   KARUR VYSYA BANK A/C No.1684135000002983 Branch; SANKARI 
IFSC:KVBL0001684 




பிறவி பிணிகள் தீர 63 நாயன்மார்களின்  
               " பெரிய புராணம்"    படியுங்கள் 







                                       "முருகாசரணம் திருச்சிற்றம்பலம்"